ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைனில் ரம்மி விளையாடினால் சிறை - தமிழக அரசு எச்சரிக்கை

ஆன்லைனில் ரம்மி விளையாடினால் சிறை - தமிழக அரசு எச்சரிக்கை

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

பல காவலர்கள் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியிருப்பது தெரியவந்ததால், தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆன்லைன் ரம்மி போன்ற பணம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுளை அரசு தடை செய்துள்ளதால், இனி வரும் காலங்களில் அவற்றை விளையாடுவோரும், நடத்துவோரும் அபராதத்திற்கும், சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ள தமிழக அரசு இந்த விளையாட்டை விளையாட பயன்படுத்தும் கணினிகளும், செல்லிடபேசிகளும் மற்றும் பிற சாதனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

  மேலும், இந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் பலர் தங்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதால் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி அவ்விளையாட்டுகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதித்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த காவலர்களின் தற்கொலையை தடுக்க உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பட்டாலியன் காவலரான வெங்கடேஷ் என்பவர் ஆன்லைன் சூதாட்டமான ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்.

  Also read... இது தான் மாற்றம் முன்னேற்றமா...? செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி

  இந்நிலையில் மேலும் பல காவலர்கள் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியிருப்பது தெரியவந்ததால், தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

  அதில் இனி காவலர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க கவாத்து மற்றும் வருகை பதிவின் போது காவலர்களுக்கு கண்காணிப்பாளர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காவலர்கள் முதல் சிறப்பு காவலர்கள் வரை குறிப்பாக ஆயுதப்படை காவலர்கள் என அனைவருக்கும் அறிவுரை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Online rummy