ஓசூரில் புதிய விமான நிலையம் - தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அப்டேட்
ஓசூரில் புதிய விமான நிலையம் - தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அப்டேட்
Hosur
Hosur Airport | அரசின் அறிவுறுத்தலின்படி ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளது என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டின் வடமேற்கு பகுதியில் தொழில் துறையின் வளர்ச்சி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, தனிமனித வருவாய் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதி தொழிற்சாலைகளுக்கான மையமாக இருப்பதால் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு இப்பகுதியை சுற்றியுள்ள விமான போக்குவரத்துத்துறை மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாத்தியக்கூறு உள்ள இடங்கள் ஆய்வு செய்யுமாறு டிட்கோவை அரசு பணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அரசின் அறிவுறுத்தலின்படி ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளது என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.