• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 38% குறைந்துள்ளது... நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!

சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 38% குறைந்துள்ளது... நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை 50 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவரது பின்புறம் அமர்ந்து பயணிப்பவர் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க கோரியும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள்
சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க கோரியும் சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து துறையின் முதன்மை செயலர் ஜவஹர் மற்றும் காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ. ஜி சாம்சன் ஆகியோர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகம் முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் முதல் 2019 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில்
ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 68,76,452 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 15,90,382 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 7,291 பேர் மீதும், வாகனம் ஓட்டும்போது செல்போனை உபயோகித்ததாக 4,63,543 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருவதால், கடந்த 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது, சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 38 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அதனை இந்தாண்டு 50 சதவீதமாக குறைக்க அரசுத் துறைகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் மார்ச் 18 -ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: