2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
2020-21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்துக்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு தலைமைச் செயலகம்
- News18
- Last Updated: December 1, 2020, 5:26 PM IST
ஊரக மற்றும் நகர்புறங்களில் சமுதாய சொத்துக்களை மக்கள் பங்களிப்புடன் உருவாக்கி பராமரிப்பதற்கு 2011-12 ஆம் ஆண்டு முதல் தன்னிறைவுத் திட்டம் என்னும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்புடன் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் பள்ளிகளுக்கான கட்டடங்கள், சற்றுச்சுவர், ஆய்வகங்கள், கழிவறைகள், மருத்துவமனைகள், கால்நடை வளர்ப்பு மையங்கள், நூலகங்கள், விடுதிகள், மதிய சத்துணவு கூடங்கள், சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு ரேஷன்கடைகள் உள்ளிட்டவைகளை கட்டலாம்.
இந்த திட்டதுக்கு 2020-21 ஆம் நிதி ஆண்டுக்கு 50 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை ஆணையர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இதனை பரிசீலித்த அரசு, தன்னிறைவு திட்டதின் 2020-21 ஆம் நிதி ஆண்டுக்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
Also read... #Burevi Cyclone | 'மக்கள் பாதிக்கப்படக்கூடாது, சிரமப்படக்கூடாது' - அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவு.. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விவரங்களை மூன்று நிலைகளாக பிரித்து புகைப்படம் எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டதுக்கு 2020-21 ஆம் நிதி ஆண்டுக்கு 50 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை ஆணையர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இதனை பரிசீலித்த அரசு, தன்னிறைவு திட்டதின் 2020-21 ஆம் நிதி ஆண்டுக்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
Also read... #Burevi Cyclone | 'மக்கள் பாதிக்கப்படக்கூடாது, சிரமப்படக்கூடாது' - அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவு..