வாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வாகன பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 10, 2020, 8:43 PM IST
  • Share this:
பயிற்சியின் போது வாகனங்களின் கண்ணாடியை திறந்து வைக்க வேண்டும், பயிற்சியாளர் உட்பட 3 பேர் மட்டுமே வாகனத்தில் இருக்க வேண்டும் உள்ளிட்ட வாகன பயிற்சி மையங்களுக்கான வழகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் 25ம் தேதி முதல் வாகன பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. தற்போது வரை அவைகளுக்கு திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. வாகன பயிற்சி மையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் உள்ள முக்கியம்சங்கள்:-


1. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மையங்களை திறக்கக்கூடாது. அறிகுறி இல்லாத நபர்களை (பணியாளர்கள் உள்பட) மட்டுமே அனுதிக்க வேண்டும். முகக்கவசம், முகம் ஷீல்டு அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

2. சானிடைசர், ஆக்சி மீட்டர் வைத்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பார்க்கிங் உள்பட எல்லா இடத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

3. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் பயிற்சிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.4. வகுப்பறைக்குள் நீண்ட நேர வகுப்புகளை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை எடுக்க வேண்டும். நேரடி பயிற்சியின் போது, பயிற்சி மையத்தின் இட வசதிக்கு ஏற்ப, சமூக இடைவெளியுடன் வகுப்புகளை நடத்த கூடிய அளவில் நபர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்.

5. பயிற்சியின் போது வாகனங்களின் கண்ணாடியை திறந்து வைக்க வேண்டும். ஏசி பயன்படுத்தக்கூடாது.

Also read... தமிழகத்தில் புதிய வாகன பதிவு வீழ்ச்சி... டிராக்டர் விற்பனை அதிகரிப்பு

6. பயிற்சியாளர் உட்பட 3 பேர் மட்டுமே வாகனத்தில் பயிற்சியின் போது இருக்க வேண்டும்.

7. உபகரணங்கள், பொருட்களை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கும் வகையில் நபர்களுக்கு தனித்தனித் நேரத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும்.8. அனைத்து நபர்களும் ஆரோக்யா சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading