கீழடியில் அருங்காட்சியகம் - நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 

கீழடியில் அருங்காட்சியகம் - நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 
கீழடி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: February 21, 2020, 3:08 PM IST
  • Share this:
கீழடி அகழாய்வில் கிடைக்கப்பட்ட பண்டைய கால பொருட்கள் காட்சிபடுத்த அங்கயே 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பதற்கு தமிழக அரசி நிதி ஒதுக்கி அரசாணையை வெளியிட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் கிடைக்கப்பட்ட பண்டைய கால பொருட்கள் காட்சி படுத்த அங்கயே 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.


அதன் அடிப்படையில் 2019-20 ஆம் ஆண்டில் 30 லட்ச ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2020-21 ல் 11.91 கோடி ரூபாய்க்கு நிதி ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பனை அறை, நிர்வாக கூடம், சேமிப்பு கிடங்கு, சிற்றுண்டி கடை மற்றும் நூல் விற்பனை கடையுடன் கூடிய விரிந்த அகழ்வைப்பக வளாகம் அமைக்கப்பட உள்ளது.


64 லட்சம் செலவில் பார்வையாளர் பயனீட்டு தொடர்பான விளக்க அட்டை, குடிநீர் மையங்கள், தொல் பொருட்களை அருங்காட்சியகத்தில் காட்சி படுத்துதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.Also see...
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்