கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா - உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு!

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா - உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு!

கோப்பு படம்

எல்காட் நிறுவனத்தின் மூலம் ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குவதற்கான சிம்கார்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அரசு, அரசு உதவி பெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குவதற்கு உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரொனோ பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள உதவிடும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

Also read... தமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி யாருக்கு? எத்தனை பேருக்கு?

அதனடிப்படையில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், அரசின் அறிவிப்பின் படி அரசு, அரசு உதவி பெறும், தனியார் ,கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு எல்காட் நிறுவனத்தின் மூலம் 2 ஜிபி டேட்டா தினமும் அளிக்கும் வகையில் சிம் கார்டுகள் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

எல்காட் நிறுவனத்தின் மூலம் ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குவதற்கான சிம்கார்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: