மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும்.. தமிழக அரசு விளக்கம்..

மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும்..  தமிழக அரசு விளக்கம்..

கோப்புப் படம்

டிசம்பர் முதல் வாரத்திற்குள் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றமே உரிய உத்தரவு பிறப்பிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நவம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

Also read... கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..



இதை கேட்ட நீதிபதிகள், டிசம்பர் முதல் வாரத்திற்குள் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றமே உரிய உத்தரவு பிறப்பிக்கும் என தெரிவித்தனர்.

மேலும், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரை திறக்க தனி நீதிபதி தடைவிதித்த வழக்கும் இதே நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 900 தள்ளு வண்டிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், லூப் சாலை மற்றும் மீன் சந்தைகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published: