இங்கிலாந்திலிருந்து தமிழகம் வர கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்...!

இங்கிலாந்திலிருந்து தமிழகம் வர கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்...!

மாதிரி படம்

காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட சேவை மையமான 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வருபவர்கள், கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைத்து விமானங்களும் வருகிற 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வரும் அனைவரும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், தமிழகம் வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பு வைரஸ் பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் வரும் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படும் எனவும், கொரோனா உறுதியானால் மருத்துவமனைகளில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வெளியாகும் வரை அவர்களை விடுதிகளில் தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் இ-பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ள அரசு, பயணிகள் அனைவரும் இ-பாஸ் வைத்துள்ளனரா என்பதை விமான சேவை நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று இல்லாதவர்களும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also read... 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் - உமேஷ் சின்ஹா!

இந்த நாட்களில் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட சேவை மையமான 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வருபவர்களை தினந்தோறும் நேரடியாகவும் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் சுகாதாரப் பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், யாரேனும் வீடுகளில் தனிமையில் இல்லாமல் விதிமுறைகளை மீறி இருந்தால், அவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: