ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கல்லூரி: இந்த ஆண்டே துவங்க அரசு அனுமதி!

கல்லூரியில் இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், இளங்களை அறிவியல் கணிதம் பி.காம் கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுடன் துவக்கப்படவள்ளது.

Web Desk | news18
Updated: July 10, 2019, 2:50 PM IST
ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கல்லூரி: இந்த ஆண்டே துவங்க அரசு அனுமதி!
அப்துல் கலாம்
Web Desk | news18
Updated: July 10, 2019, 2:50 PM IST
ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரில்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த ஆண்டே துவங்குவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் இந்த ஆண்டே ராமேஸ்வரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

உயர்கல்வித்துறை இது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது ராமேஸ்வரத்தில் 2019-20ம் கல்வியாண்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடபட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில் , 2019-20ம் கல்வியாண்டு முதல் ராமநாதபுரம் மாவட்டம் , ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இந்த ஆண்டு துவங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுடன் துவக்கப்படவுள்ளது.

ராமேஸ்வரத்தில் பேய்கரும்பு பகுதியில், கலாம் நினைவிடம் அருகிலேயே இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைய உள்ளது. இந்த கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்களுக்கு விண்ணப்பம் விநியோகிக்கும் பணிகள் துவக்கப்பட்டு இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also see...

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...