முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு... தமிழக அரசு

அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு... தமிழக அரசு

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வரும் 31 ஆம் தேதி வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்களித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தினாலும், தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்துக்கு தடை நீடித்து வருகிறது. போக்குவரத்து வசதி இல்லாததால், மாற்றுத்திறனாளிகளுடைய உடல் குறைப்பாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு , அவர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்களிக்க மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கோரிக்கை விடுத்தார்.

Also read... அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா...? அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கோரிக்கையை பரிசீலித்த அரசு, ஏற்கனவே ஜூலை 31 ஆம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டது.

தற்போது தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 1 முதல் 31 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து விலக்களித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

First published: