ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகரித்துவிட்டது.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகரித்துவிட்டது.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநர் தமிழிசை

ஆளுநர் தமிழிசை

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துவிட்டதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து, சுற்றி இருந்தோர் "பொங்கலோ பொங்கல்" என்று உற்சாக முழக்கங்களை எழுப்ப பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “ஒரு சிலர் ஆளுநரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். முதலமைச்சர் யாரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லிய போதும் ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது. கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்பது தான் மரபு” என்று தெரிவித்தார்.

Image

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு என்கிற பெயருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. இதை அறிவித்த காமராஜருக்கு பெருமை உண்டு, அதை சட்டமாக்கிய அண்ணாவுக்கும் பெருமை உண்டு. அதை தமிழர்களாக காப்பாற்ற வேண்டியது நம் கையில் தான் உள்ளது. ஒரு கருத்தை சொன்னால் அந்த கருத்தை நாகரிகமாக எதிர்க்கொள்ள வேண்டும். பொங்கல் எப்படி இனிமையாக உள்ளதோ அதுபோலவே இணையதளங்களில் வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் வைத்தார்.

First published:

Tags: Governor, Pongal 2023, Tamilisai Soundararajan