Home /News /tamil-nadu /

நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர் - முதல்வர் ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர் - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

NEET Bill | நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளா்.

    நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளா்.

    நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து சட்டசபையில் இந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி, ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த மசோதா தொடர்பாக, குடியரசு தலைவர் மற்றும் மத்திய அரசிடமும் தமிழக எம்.பி.,க்கள் குழுவினர் மனு அளித்திருந்தனர்.

    தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து முதல்வ் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். தொடர் முயற்சியின் பயனாக, நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அளுநர் அனுப்பி உள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி