• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாநகர பேருந்தில் இலவசம் பயணம் திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முடிவு

மாநகர பேருந்தில் இலவசம் பயணம் திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முடிவு

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள்

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள்

12.07.2021 முதல் 26.08.2021 வரை 1,463.15 மதிப்பு பயணச் இலட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

  • Share this:
    போக்குவரத்துறை கொள்கை விளக்க குறிப்பில், அனைத்து பெண் பயணிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 7,312 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன . அரசு போக்குவரத்துக் கழகங்கள் 12.07.2021 முதல் கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக பூஜ்ஜிய சீட்டுகளை பெண் பயணிகளுக்கு வழங்குகின்றன .

    12.07.2021 முதல் 26.08.2021 வரை 1,463.15 மதிப்பு பயணச் இலட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மொத்த பயணிகளில் சுமார் 60.70 % ஆகும். இந்த இலவச பயண வசதி திருநங்கைகள் மற்றும் 40 % மற்றும் அதற்கு மேலுள்ள மாற்றுத் திறனாளிகளின் துணையாளர் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Also Read : வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - தமிழக அரசு

    மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் லிமிடெட் 210 சிறிய பேருந்துகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் , 66 சிறிய பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன , பயணிகளின் பயன்பாடு குறைந்து அதிக இழப்பு ஏற்பட்டதால் சிறிய பேருந்துகள் இயக்கப்படாமல் 144 மீதமுள்ள நிறுத்தப்பட்டுள்ளன. எனவே , நிறுத்தப்பட்டுள்ள இச்சிறிய பேருந்துகளை சிறந்த முறையில் பயன்படுத்திட , பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது .

    இதன் காரணமாக சென்னை மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை உயர்வதுடன் , மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும்.இதனை செயல்படுத்திட மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: