அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை - அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தலைமைச் செயலகம்
- News18 Tamil
- Last Updated: June 24, 2020, 8:01 PM IST
அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் சில கூடுதல் பயன்களுடன் 2016 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரையிலான 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.
அந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டதுடன், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7.50 லட்ச ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது.
இந்த புதிய காப்பீட்டு திட்டத்துக்கான காலம் வரும் 2020 ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு அதாவது 2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே போல், அரசு ஊழியர்களுக்காக காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கான சிகிச்சை சேர்க்கப்பட்டு அதற்கான கட்டணமும் நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Also read... மதுரையில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு... இன்று எவ்வளவு தெரியுமா?அதன்படி வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு நாளொன்றுக்கு 6,500 ரூபாயும், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு நாளொன்றுக்கு 8,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண சிகிச்சைக்கு ஏ 1 மற்றும் ஏ 2 வகை மருத்துவமனைகளுக்கு நாளொன்றுக்கு 9,500 ரூபாயும், ஏ 3 முதல் ஏ 6 வகை மருத்துவமனைகளுக்கு 7,500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.