தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தந்தையை இழந்த துயர தருணத்திலும் தந்தை மருத்துவ செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தினை கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1,970 நிதி வழங்கி நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் சிறுமி ரிதானா. மேலும் முதல்வருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
உலகினை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனாவினால் ஒவ்வொரு நாளும் பாதிப்புகளும், உயிர் இழப்புகளும் அதிகாரித்து கொண்டு இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்கவும், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் காக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு பொது மக்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
அதனை தொடர்ந்து மதுரையை சேர்ந்த சிறுவன் ஹரீஸ்வர்மன் என்ற சிறுவன் மீதிவண்டி வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தினை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்தார். மாணவனுக்கு புதிய மிதிவண்டி வாங்கி கொடுத்தது மட்டுமின்றி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சிறுவனை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதையெடுத்து பல்வேறு தரப்பினரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அதிலும் ஆங்காங்கே சிறுவர்கள் தங்கள் சேமிப்பு பணத்தினை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக சேமித்து வைத்திருந்த பணத்தினை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கோவில்பட்டி ராஜீவ் நகர் 2வது தெருவினை சேர்ந்த நாகராஜ் -அமுதா தம்பதியின் மகள் ரிதானா. தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். தனது பெற்றோர்கள் தரும் பணத்தினை சேமித்து வைத்து தனக்கு பிடித்த பொருள்களை வாங்குவது அல்லது தன்னுடன் படிக்கும் சகமாணவிகள் யாராவது கஷ்டப்பட்டால் அவர்களுக்கு அந்த சேமிப்பு பணத்தில் இருந்து உதவி செய்வதை ரிதானா தன்னுடைய பழக்கமாக கொண்டுள்ளார் சிறுமி ரிதானா.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நாகராஜ்-க்கு கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது, தன்னுடைய சேமிப்பு பணத்தினை தந்தையின் மருத்துவ செலவுக்காக கொடுத்துள்ளார் ரிதானா. ஆனால் நாகராஜ் மாரடைப்பு காரணமாக தீடீரென உயிர் இழந்தார். இதனால் ரிதானா சேமிப்பு பணம் பயன்படுத்தபடாமல் இருந்துள்ளது. கொரோனா ஊரடங்கு வேறு இருந்த காரணத்தினால் வெளியில் எங்கும் செல்லமால் பணத்தினை செலவு செய்மால் ரிதானா வைத்துள்ளார். தற்பொழுது கொரோனா தொற்று அதிகரித்து பலர் உயிரிழந்து வருவதையும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசுக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவிப்பனையும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருவது குறித்து அறிந்த சிறுதி ரிதானா தான் சேமித்து வைத்திருந்த ரூ 1970யை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரிடம் வழங்கினார். மேலும் முதல்வருக்கு ஒரு கடிதத்தினையும் கனிமொழி எம்.பியிடம் வழங்கினார் சிறுமி ரிதானா.
கோவில்பட்டி சிறுமி ரிதானா தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக தான் சேமித்து வைத்திருந்த ₹1970ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக என்னிடம் வழங்கினார். (1/2) #TNCMReliefFund pic.twitter.com/MT2D17tFZC
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 15, 2021
முதல்வருக்கு வழங்கிய கடித்தில் என்னுயை அப்பா மருத்துவ செலவிற்காக பணம் சேமித்து வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டார் என்பதால் அந்த பணத்தினை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும், தான் அப்பாவை இழந்தது போன்று, எந்த குழந்தையும் அப்பா, அம்மாவை இழந்து விடக்கூடாது என்று இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.
நிதி வழங்கியது மட்டுமின்றி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள சிறுமியின் செயலை கனிமொழி எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜூம் மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அப்பாவின் மருத்துவ செலவிற்காக பணம் சேமித்து வைத்து இருந்ததாகவும், ஆனால் அதற்குள்ளாக அப்பா இறந்து விட்டார். தன்னுடன் படிக்கும் சகமாணவிகளுக்கு உதவிகள் செய்து வந்தேன், கொரோனா பாதிப்பு காரணமாக நிறைய பேர் பெற்றோர்களை இழந்து வருகின்றனர். அதனை டிவியில் பார்த்தேன், ஆகையால் என்னால் முடிந்த உதவியை வழங்கி உள்ளேன், எல்லோரும் அரசுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார் சிறுமி ரிதானா
ஸ்நாக்ஸ் வாங்க கொடுக்க கூடிய பணத்தினை ரிதானா சேமித்த வைக்கும் பழக்கம் கொண்டவர், இயல்பாகவே அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், கடந்த ஆண்டு எனது கணவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவிற்காக பணத்திற்காக கஷ்டப்பட்ட போது தனது சேமிப்பு பணத்தினை செலவு செய்ய கொடுத்தார். ஆனால் எனது கணவர் உயிரிழந்து விட்டார். அந்த சேமிப்பு பணத்தில் இருந்து தனது சக மாணவிகளுக்கு சில உதவிகளை செய்த பின்னர் மீதம் வைத்திருந்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கபோவதாக தெரிவித்தார். அதன் படி இன்று கனிமொழி சகோதிரியிடம் அந்த பணத்தினை வழங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார் ரிதானாவின் தாய் அமுதா
மதுரையை சேர்ந்த சிறுவன் ஹரீஸ்வர்மன் தொடங்கி ரிதானா வரை இன்றைக்குள் சிறுவர்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கும் மானதாபிமானம் என்பது நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: COVID-19 Second Wave, Kanimozhi, MKStalin, Tuticorin