முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்..? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு என தகவல்

விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்..? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு என தகவல்

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு மாதத்திற்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த முடிவு செயப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் தலைமையில் நடந்த மாவட்டசெயலாளர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள மாநிலச் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக புதிய உறுப்பினர் அட்டை விநியோகம், பொதுச் செயலாளர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள், இடைத்தேர்தல் பின்னடைவு, பாஜக-அதிமுக இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடத்தப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவார் என தகவல் வந்துள்ளது.

First published:

Tags: ADMK, Admk Party