ஏலச்சீட்டு என்ற பெயரில் போலீசாரிடம் பல கோடி ரூபாய் மோசடி!

ஏலச்சீட்டு நிறுவனத்தை முறையாக நடத்தி வந்த கண்ணன், சீட்டுப் பணத்தில் விருகம்பாக்கம், மாத்தூர், புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வீடு, நிலங்கள் வாங்குவது மற்றும் வட்டிக்கு கொடுப்பது என செலவழித்ததாக கூறப்படுகிறது.

news18
Updated: July 6, 2019, 7:39 AM IST
ஏலச்சீட்டு என்ற பெயரில் போலீசாரிடம் பல கோடி ரூபாய் மோசடி!
மோசடியில் ஈடுபட்ட நபர்
news18
Updated: July 6, 2019, 7:39 AM IST
காவலர்களிடமே ஏலச்சீட்டு என்ற பெயரில் பல கோடி ரூபாயை மோசடி செய்த கும்பல் சென்னையில் சிக்கியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் புதுப்பேட்டை சுப்பராய முதலி தெருவில் அரிசி மண்டிக் கடை, மருந்தகம் ஆகியவற்றை நடத்தி வந்தார். அதே தெருவில் இவருக்கு சொந்தமாக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது; கடந்த 15 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

இவரது உறவினர்கள் சிலர் காவலர்கள் என்பதால் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்த காவலர்களும் இவரிடம் சீட்டுப் பணம் செலுத்தி வந்தனர்.

2 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான சீட்டுத் திட்டங்களை நடத்தி வந்தார் கண்ணன். போலீசார் உள்ளிட்ட ஒவ்வொருவரும் 5,000 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை சீட்டுப் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

ஏலச்சீட்டு நிறுவனத்தை முறையாக நடத்தி வந்த கண்ணன், சீட்டுப் பணத்தில் விருகம்பாக்கம், மாத்தூர், புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வீடு, நிலங்கள் வாங்குவது மற்றும் வட்டிக்கு கொடுப்பது என செலவழித்ததாக கூறப்படுகிறது.

விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தனக்கு சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டியுள்ளார்; சிலவற்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஏலச்சீட்டு பணத்தை வாடிக்கையாளர்களுக்கு முறையாக செலுத்தாமல் போக்கு காட்டி வந்துள்ளார்.

அதேநேரம், தனக்கு சொந்தமான வீடுகளை குத்தகைக்கு விட்டும் பணம் சம்பாதித்துள்ளார். அதே வீடுகளை வங்கிகளில் காட்டி கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார்.

இப்படி 300 நபர்களிடம் வீடு குத்தகைக்கு விட்ட பணம், சீட்டுப் பணம் ஆகியவற்றுடன் கண்ணன் தலைமறைவாகி விட்டார்.

அதேநேரம், வீடுகளின் மீது கண்ணன் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தாமல் விட்டதால் வீட்டில் குடியிருப்பவர்களை வெளியேற்றி விட்டு கையகப்படுத்தும் நடவடிக்கையில் வங்கி இறங்கியுள்ளது.

மேலும், வங்கியில் இருந்து சம்பந்தப்பட்ட வீடுகளின் வாசலில் நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கண்ணனைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான், வியாழக்கிழமை இரவு விருகம்பாக்கத்தில் தான் வசித்து வந்த வீட்டினைக் காலி செய்வதற்காக லாரியில், மாமனார் நாகராஜ் வந்துள்ளார்.

தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அங்கு வந்து அவர்களைப் பிடிக்க முயன்றபோது கண்ணன் தப்பியோடி விட்டார்; மாமனார் நாகராஜ் சிக்கிக் கொண்டார். நாகேந்திரனை சுற்றிவளைத்த பாதிக்கப்பட்டவர்கள், கே.கே நகர் காவல்நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.

Also see...

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...