Home /News /tamil-nadu /

இணையத்தில் ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்.. உஷார்.. - மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

இணையத்தில் ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்.. உஷார்.. - மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

செல்போனில் பேசிய மர்மக்குரல் நீ இணையத்தில் ஆபாசப் படம் பார்த்தாய் மறந்துவிட்டாயா. உன் மனைவியின் படத்தை மார்ப்பிங் செய்து அனுப்பவா. உன் மனைவி வங்கி ஊழியராமே என மிரட்டியது அந்த குரல்.

    கரூரில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்தவரின் தகவலை திரட்டி அவரது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டியவர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கரூரை சேர்ந்த நபருடைய செல்போனுக்கு ஒரு எண்ணில் இருந்து இளம்பெண்ணின் ஆபாசப்படம் ஒன்று குறுஞ்செய்தி மூலம் வந்துள்ளது. சிறிது நேரத்தில் அவரது போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர் உனக்கு அனுப்பிய படம் எப்படி இருக்கு? இதேபோன்று உன் மனைவியின் படத்தை அனுப்பவா எனக் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் பேசிய அந்த மர்மக்குரல் நீ இணையத்தில் ஆபாசப் படம் பார்த்தாய் மறந்துவிட்டாயா. உன் மனைவியின் படத்தை மார்ப்பிங் செய்து அனுப்பவா. உன் மனைவி வங்கி ஊழியராமே என மிரட்டியது அந்த குரல்.

    இதனைக்கேட்டு மிரண்டு போன நபர். நீ யார் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த மர்மக்குரல் கேட்கவே பயத்தின் காரணமாக கூகுள் பே மூலம் அந்த தொகையை அனுப்பியுள்ளார். இதன்காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். கணவனின் நடத்தையில் மாற்றம் இருப்பதை அறிந்த அவரது மனைவி என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார். அந்த நபர் இணையத்தில் ஆபாசப்படம் பார்த்தது முதல் தனக்கு வந்த மிரட்டல் போன் கால் வரை அத்தனையும் கூறியுள்ளார். வங்கி ஊழியரான அவரது மனைவி இந்த விவகாரத்தை சைபர் க்ரைம் போலீசுக்கு எடுத்துச் சென்றார்.

    இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அவருக்கு வந்த செல்போன் அழைப்பு கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய வங்கி  கணக்கு ஆகியவற்றை ஆராய்ந்தனர். இதில் அந்த நபர் இணையத்தளத்தில் வந்த ஆபாச விளம்பரத்தை பார்த்து அதில் அவர்கள் கேட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். இதுவே பிரச்னைக்கு காரணமாக இருந்துள்ளது. இதனைப்பயன்படுத்திய மர்மகும்பல் செல்போன் எண்ணை வைத்து அவரது குடும்ப விவரங்களை திரட்டியுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தையும் சேகரித்தது தெரியவந்துள்ளது. இணையத்தில் இருந்து ஒரு ஆபாச படத்தை எடுத்து அந்த நபரை மிரட்டியுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சியை சேர்ந்த 27 வயதான  பிரசாந்த் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அஜீத் குமார் ( வயது 49) ஆகியோரை கைது செய்துள்ளனர். இதில் பிரசாந்த் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களிடம் இருந்து பணம், செல்போன், லேப்டாப் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Adultery, Crime | குற்றச் செய்திகள், Cyber crime, Online crime, Porn websites

    அடுத்த செய்தி