5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தேர்தல் ஆணையம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் தேதிகளை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம் இன்று கூடுகிறது.

  • Share this:
    தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    மேலும் படிக்க... நான் மந்திரவாதியல்ல, செயல்வாதி : பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர்

    இந்த கூட்டத்தில் எத்தனை கட்டமாக தேர்தலை நடத்துவது, எந்தெந்த மாநிலங்கள் எந்தெந்த கட்டதில் தேர்தலை சந்திக்கும், வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாகவும், முழு ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.அதன் பின்னர், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: