ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிறுத்தை உயிரிழந்த விவகாரம் : ரவீந்திரநாத் எம்.பி.-க்கு சம்மன் அனுப்பிய வனத்துறை!

சிறுத்தை உயிரிழந்த விவகாரம் : ரவீந்திரநாத் எம்.பி.-க்கு சம்மன் அனுப்பிய வனத்துறை!

ரவீந்திரநாத் எம்.பி

ரவீந்திரநாத் எம்.பி

ரவீந்திரநாத் மீது விசாரணை நடத்துவதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெரியகுளம் அருகே ரவீந்திரநாத் எம்.பி.,-க்கு சொந்த தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது தொடர்பாக, அவர் நேரில் ஆஜராக வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ரவீந்திரநாத்-க்கு சொந்தமான தோட்டத்தில் அண்மையில் சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது.

  இது தொடர்பாக தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

  இதையும் படிங்க... அரசியலை விட்டு விலகத் தயார்..! - இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் விடுத்த சவால்

  மேலும், தோட்ட உரிமையாளர் என்ற அடிப்படையில் ரவீந்திரநாத் எம்.பி. உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். அத்துடன்,  ரவீந்திரநாத் மீது விசாரணை நடத்துவதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார்.

  இந்நிலையில் சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ரவீந்திரநாத் எம்.பி.,-க்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், இரண்டு வாரத்திற்குள் ஆஜராகுமாறு குறிப்பிட்டுள்ளதாக தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தகவல் தெரிவித்துள்ளார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: OPS, Theni