மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி, 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம், இன்று நள்ளிரவு (ஏப்ரல் 14ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம், இன்று நள்ளிரவு முதல் முதல் அமலுக்கு வருகிறது. இத்ந தடைகாலம் ஜூன் 14ம் தேதி வரையில், 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும். இந்த தடைகாலமானது ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில்
61 நாட்கள் இருந்த நிலையில், மத்திய அரசின் கால அவகாசத்தின் பேரில், தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் முடிந்ததையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மீன்பிடி தடைக்காலம் காரணமாக, மீனவர்கள் தங்களின் விசைப் படகுகளை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கடலுார் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்படும், மேலும், மீனவர்கள் தங்கள் விசை படகுகளை வர்ணம் பூசி, பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபடுவர். அத்துடன், வலைகளை சீரமைக்கும் பணிகளிலும் ஈடுபடுவது வழக்கம்.
Must Read : ஜெர்மன் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி மணந்த இளம் தொழிலதிபர்.. ஆரணியில் அமோகமாக நடந்த திருமணம்
இந்நிலையில், ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகள் உள்ளிட்ட மீனவர்கள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்படும். இதனால், இந்த காலத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழக அரசு ஒவ்வொரு மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.