தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது!

கலைவாணர் அரங்கம்

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

  • Share this:
    மே 11 ஆம் தேதி பதினோராம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். இதைந்தொடர்ந்து, பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மே 12ம் தேதி நடைபெற உள்ளது என்று சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பதினாறாவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே.11ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் தொடங்க உள்ளது. அவ்வமயம், இந்திய அரசமைப்பின் கீழ், உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சட்டமன்றப் பேரவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்பொழுது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டுவர வேண்டும்.

    தொடர்ந்து, தமிழக சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் மே.12ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published: