தமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி யாருக்கு? எத்தனை பேருக்கு?

தமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி யாருக்கு? எத்தனை பேருக்கு?

மாதிரி படம்

Cold chain எனப்படும் தடுப்பூசியை குளிரூட்டி வசதிகளில் பதப்படுத்துவதற்கான நடைமுறையை பிழையில்லாமல் பின்பற்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதுவரை நான்கரை லட்சம் பேர் கோ வின் செயலி மூலம் கொரோனா தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர் . மேலும் 50,000 பேர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தமிழகத்தில் 47,200 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக மருத்துவமனைகள் உடன் இணைந்த 2000 மையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மையங்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் , மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புறங்களில் 30 படுக்கை வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் , 500 சுகாதார பணியாளர்கள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு முதல் கட்டமாக இந்த இடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.

மருத்துவமனையுடன் இணைந்த மையங்களாக இருந்தால் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், ஏதாவது உடல் நிலை மாற்றம் ஏற்பட்டால் உடனே கவனிக்கவும் வசதியாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து விமானம் மூலம் தடுப்புமருந்து சென்னைக்கு வந்து சேரும் அவர் சென்னையிலிருந்து மாநிலம் முழுவதும் 10 மண்டல கிடங்கு களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். சென்னையில் இருந்து மண்டல கிடங்குக்கு அனுப்பும் வழியிலேயே மாவட்ட கிடங்கு இருந்தால் நேரடியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் இல் மட்டுமே பதப்படுத்தி வைக்க வேண்டும் என்பதால் இதுபோன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

Cold chain எனப்படும் தடுப்பூசியை குளிரூட்டி வசதிகளில் பதப்படுத்துவதற்கான நடைமுறையை பிழையில்லாமல் பின்பற்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை சென்னையில் மாநகராட்சி ஆணையரும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரும் கண்காணிக்கும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தலைமையில் மதுரை பகுதியில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Also read... திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு...!

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தபோது, " தமிழகத்தில் ஆயிரம் தடுப்பூசி மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தாலே மாநிலத்திலுள்ள உள்ள சுகாதார பணியாளர்களுக்கு ஐந்து நாட்களில் தடுப்பூசியை போட்டு முடிக்க முடியும். போலியோ சொட்டு மருந்தை போல இது ஒரே நாளில் போட வேண்டியது அல்ல ஒவ்வொரு கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும்.

எனவே தமிழகத்தில் 15000 முதல் 20000 மையங்கள் செயல்பாட்டில் இருந்தாலே போதுமானது என்பது எங்கள் கணிப்பு. தமிழகத்துக்கு எப்போது எவ்வளவு தடுப்பூசி வரும் என்பது குறித்து மத்திய அரசு விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம்" சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து காவல்துறையினர் தடுப்பூசிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: