சென்னையில் ஐந்து மாதத்திற்குப் பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

சென்னையில் ஐந்து மாத ஊரடங்கு காலத்திற்கு பிறகு இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

சென்னையில் ஐந்து மாதத்திற்குப் பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
சென்னை மெட்ரோ ரயில்
  • News18
  • Last Updated: September 7, 2020, 11:00 AM IST
  • Share this:
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையானது கடந்த 160 நாட்களாக இயங்கவில்லை. கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் மெட்ரோ ஏற்பாடுகளை ஆய்வு செய்து முதல் ரயிலில் பயணம் செய்தார்.

மெட்ரோ ரயில் சேவைதினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை - 12 மணி நேரம் மட்டுமே, விமான  நிலையத்திலிருந்து - வண்ணாரப்பேட்டை வரை ரயில் இயக்கப்படுகிறது.

சின்ன மலையிலிருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான சேவை செப்டம்பர் 9ம் தேதி முதல் துவங்கும்.
Peak hours என்னும் மெட்ரோ பயணிகள் அதிகமாக வரக்கூடிய நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவையும் இயங்கும்.Also read... ஆன்லைன் வகுப்புகள் - சாதகங்கள் & பாதகங்கள் என்னென்ன...? ஓர் அலசல்ஒவ்வொரு நிறுத்தங்களிலும் மெட்ரோ ரயில் 50 வினாடிகள் நின்று செல்லும், முன்பு 20 வினாடிகள் மட்டுமே நின்று சென்று வந்த நிலையில். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொறுமையாக மெட்ரோ ரயில்களில் ஏறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்


மாஸ்க், சமூக இடைவெளி விட்டு ரயிலில் அமர்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ரயிலில் இரு வாசல்கள் வழியே மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மெட்ரோ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டுள்ளது.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading