ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்... பெண் காவலர் உள்பட 53 பேர் காயம்!

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்... பெண் காவலர் உள்பட 53 பேர் காயம்!

முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது

முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது

காலை 8.30 மணிக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோ இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவுபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில், அடைக்கல மாதா ஆலய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் தச்சங்குறிச்சி விழாக்கோலம் பூண்டது. காலை 8 மணிக்கு போட்டி தொடங்க இருந்த நிலையில், முன்பதிவு செய்த வீரகளை அனுமதிக்கவில்லை எனக் கூறி சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போட்டி தொடங்குவது தாமதமாக தொடங்கியது.

இதையடுத்து, காலை 8.30 மணிக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வாடி வாசலில் இருந்து வெளியேறிய காளைகள், சீறிப் பாய்ந்தன.

ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் 25 வீரர்கள் வீதம், சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்பட்டனர். அதிக காளைகளைப் பிடித்த 6 பேர் மட்டும் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கி பரிசுகளைப் பெற்றனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு இருசக்கர வாகனமும், இரண்டாவது இடம் பெறுபவர்களுக்கு சைக்கிளும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 485 காளைகள் களமிறங்கியுள்ளன. இதில், பெண் காவலர் உள்ளிட்ட 53 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

First published:

Tags: Jallikattu, Pudukottai