• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TN Budget 2021 : மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் - மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமா?

TN Budget 2021 : மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் - மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமா?

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழக பட்ஜெட் தாக்கல் கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்யப்படுகிறது.

  • Share this:
    தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மு.க.ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட் இதுவாகும். இ-பட்ஜெட் என்பதால் எம்.எல்.ஏ.க்கள் கம்ப்யூட்டர் திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் கடந்த 2018ஆம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை காகிதவடிவில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் சுமார் 1.30 மணிநேரம் பட்ஜெட்டை வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் வார்த்தைகளாக ஓடும். அதுதவிர ‘டேப்லெட்’ என்ற கருவியும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றிலும் பட்ஜெட் தொகுப்பை காணலாம்.

    கொரோனா தொற்று காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கத்தின் 3ஆவது மாடியில் சட்டசபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி, அடுத்த மாதம் செப்டம்பர் 21ஆம் தேதிவரை நடைபெறுகிறது. அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் இந்த கூட்டத் தொடரில் நடைபெறுகின்றன.

    Read More : TN Budget 2021 Live Update : தமிழக பட்ஜெட் லைவ் அப்டேட்

    சமீபத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள் பற்றி பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் கடந்த ஆட்சியைப் பற்றி பல விமர்சனங்களை முன்வைத்தார்.

    Must Read : மதுரை ஆதீனம் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைப்பு - நித்தியானந்தா அறிக்கை எதிரொலி?

    இந்நிலையில், தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, சட்டசபை அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: