சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களின் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்களர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.
வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் படி சென்னையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 61,18,734 ஆகும் இதில் ஆண் வாக்காளர்கள் 30,23 ,803 வாக்காளர்களும் 30,93,355 மற்றும் மூன்றாம் பாலின் வாக்காளர்கள் 1,576 உள்ளனர் . மேலும் மொத்தம் உள்ள 5794 வாக்குச்சாவடிகளில், ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்களுக்கென தலா 255 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சென்னை மண்டல பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை டெல்லி தேர்தல் ஆணையம் நவம்பரில் வெளியிட்டது. அதனடிப்படையிலே, இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது.
தேர்தல் நடக்கும் இறுதி நாட்கள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு வேட்புமனு தாக்கலுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் 100% இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவே இந்த தேர்தலை மாநகராட்சி ஆணையரும் காவல் ஆணையரும் நேர்மையாக நடத்துவார்கள் என நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என தெரிவித்தார்.
Also read... மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத்தலைவர் தாமோதரன், "தேர்தல் நடக்கும் இறுதி நாட்கள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் நீக்கவும் கால அவகாசம் உள்ளது எனவே மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.