தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
அதன்படி, நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினம் முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம். இதையடுத்து, 2021 ஜனவரி 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வயதை நிரூபிக்கும் சான்று அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றிற்கு www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவும் வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செல்போன் செயலி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 15 நாட்கள் தாமதமாக வெளியிடப்படுவதாக முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.