விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Web Desk | news18
Updated: October 4, 2019, 8:19 AM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Web Desk | news18
Updated: October 4, 2019, 8:19 AM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 12ம் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.


முத்தமிழ்செல்வனுக்கு இரட்டை இலை சின்னமும், புகழேந்திக்கு உதயசூரியன் சின்னமும், கந்தசாமிக்கு கரும்பு விவசாயி சின்னமும், இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனருமான கௌதமனுக்கு சாவி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் பிரவினா மதியழகன் உட்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர்.

Loading...

நாங்குநேரி தொகுதியில் அதிமுக நாளை தேர்தல் பணிமனையை தொடங்கி, பிரசாரத்தில் ஈடுபட உள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில், வருகிற 12-ம் தேதியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையைத் தொடங்குகிறார். 12, 13, மற்றும் 16 தேதிகளில் நாங்குநேரியிலும், 14, 15 மற்றும் 18 தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும் அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.
First published: October 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...