• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கிருஷ்ணகிரியில் பாலியல் பேரத்திற்காக ரூ 200 க்கு தொடங்கிய சண்டை.. கொலையில் முடிந்தது எப்படி?..

கிருஷ்ணகிரியில் பாலியல் பேரத்திற்காக ரூ 200 க்கு தொடங்கிய சண்டை.. கொலையில் முடிந்தது எப்படி?..

Youtube Video

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் தரகர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிக்கியுள்ளார். 200 ரூபாய்க்காக நடந்த சண்டை கொலையில் முடிந்தது எப்படி?

  • Share this:
    பாலியல் தொழிலாளிடம் 200 ரூபாய் பேரம் பேசிய லாரி ஓட்டுநர், தரகரை அடித்து கொலை செய்திருக்கிறார். குற்றவாளி பிடிபட்டது எப்படி?

    கிருஷ்ணகிரி மாவட்டம் கே.பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதான பெண். இவர் ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகே சாலையோரம் நின்று கொண்டு, லாரி ஓட்டுநர்களிடம் பேசி பாலியல் தொழிலில் ஈடுபடுவது வழக்கம். அந்த பெண்ணுக்கு தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை சேர்ந்த 50 வயதான வெங்கடேசன் தரகராக இருந்தார்.

    கடந்த 17ஆம் தேதி அந்த பெண்ணும், வெங்கடேசனும் போலுப்பள்ளி அருகே நின்ற போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி 200 ரூபாய் கொடுத்தால் ஒரு மணி நேரம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார் வெங்கடேசன். அதை நம்பிய லாரி ஓட்டுநர் 200 ரூபாய் கொடுத்துவிட்டு பெண்ணுடன் மறைவான பகுதிக்கு சென்றுள்ளார்.

    ஆனால், லாரி ஓட்டுநர் கொடுத்த 200 ரூபாய்க்கு 5 நிமிடம்தான் நேரம் ஒதுக்க முடியும் என பாலியல் தொழிலாளி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் கத்தவே, என்ன நடக்கிறது என விசாரிக்க வெங்கடேசனும் அங்கு சென்றுள்ளார்.

    அப்போது இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, லாரி ஓட்டுநர் அருகில் கிடந்த இரும்பும் கம்பியால் தரகரையும் , பெண்ணையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்தப் பெண் தனது கணவருக்குத் தகவல் அளித்து அவர் மூலம் இருவரும் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார்; அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மதுரை மாவட்டம் விராட்டிபத்து - தேனி சாலையைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்ற லாரி ஓட்டுநர் சிக்கியுள்ளார்.

    மேலும் படிக்க...நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம் - திரையுலகினர் அஞ்சலி

    வாக்குமூலத்தில் 200 ரூபாய்க்காக நடந்த சண்டையில் ஆத்திரமடைந்து இரும்புக் கம்பியால் அடித்ததாக ஒப்புக் கொண்டார் சுரேஷ்குமார். மேலும் பல பெண்களிடம் இப்படி சென்ற போது பணத்தை இழந்துள்ளதாகவும் , அது போன்று மீண்டும் நடந்து விட கூடாது என்று முன் எச்சரிக்கையாக தாக்கியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


     



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: