குழந்தையை 2 லட்சத்திற்கு விற்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தந்தை கைது!

குழந்தையை 2 லட்சத்திற்கு விற்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தந்தை கைது!
மாதிரி படம்
  • Share this:
ழனியில் பெற்ற குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சின்னக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் 31 வயதான செல்வம். தென்னை மரம் ஏறும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி 26 வயதான தனலட்சுமி.

இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவதாகவும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.


கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி பழனி பேருந்து நிலையத்திற்கு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வம் வந்துள்ளார். அப்போது மனைவி, மற்ற குழந்தைகளை கழிவறைக்கு அழைத்துச் செல்வதற்காக, கைக் குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது கைக்குழந்தை காணாமல் போயிருந்தது. குழந்தை எங்கே எனக் கேட்டபோது, குழந்தையை காணவில்லை என செல்வம் கூறியுள்ளார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி, பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார் கணவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தந்திக்குப்பம் வரட்டனப்பள்ளியை சேர்ந்தவர்க்ள் யுவராஜ் - விஜயலட்சுமி தம்பதி.

யுவராஜ் லக்னோவில் கட்டடத்துக்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி இருபது வருடமாக குழந்தை இல்லை.

இதை போர்வெல் லாரியில் வேலை பார்க்கும் தனது நண்பர் ஜானிடம் யுவராஜ் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். ஜான் வேலை விஷயமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவிற்கு உட்பட்ட தளிக்கு சென்றார்.

அங்கிருந்த 45 வயதான வீரா என்ற டீக்கடைக்காரரிடம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஏதேனும் குழந்தை விற்பனைக்கு கிடைக்குமா எனக் கேட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சின்னக்காட்டுப்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவர் உடன் தனக்கு பழக்கம் உள்ளதாக கூறியுள்ளார்.

செல்வம் - தனலட்சுமி தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நான்கு பேரையும் வளர்க்க சிரமப்பட்டு வருவதால் அவரிடம் ஒரு குழந்தையை கேட்டுப்பார்க்கலாம் என ஜானிடம் கூறியுள்ளார்.

இதை அடுத்து குழந்தையை விலைக்கு தரமுடியுமா என செல்வத்திடம் கேட்டபோது, யுவராஜ் தம்பதிக்கு கை குழந்தையை தர சம்மதித்துள்ளார்.

குழந்தைக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் விலை பேசி, யுவராஜ் இடம் இருந்து பணத்தை வாங்கிய ஜான், 2 லட்ச ரூபாயை செல்வத்திடமும், 20 ஆயிரம் ரூபாயை வீராவிடமும், ஒரு லட்ச ரூபாயை தானும் வைத்துக்கொண்டார்.

மனைவிக்கு தெரியாமல் பழநி பேருந்து நிலையத்தில் குழந்தையை யுவராஜ்- விஜயலட்சுமி தம்பதியிடம் செல்வம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

யுவராஜ்- விஜயலட்சுமி தம்பதியையும் குழந்தையையும் போலீசார் தேடினர். ஆனால் அவர்கள் வடமாநிலத்திற்கு சென்று தலைமறைவாகிவிட்டதால் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமை அவர்களை பிடித்த பழனி தனிப்படை போலீசார், குழந்தையை மீட்டு தாயிடம் ஓப்படைத்தனர்.

தொடர்ந்து குழந்தையை விற்ற தந்தை செல்வம், குழந்தையை வாங்கிய விஜயலட்சுமி, இடைத்தரகர் வீரா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜானை தேடி வருகின்றனர்.

Also see...
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading