சென்னையில் நள்ளிரவில் ரவுடியை என்கவுன்டர் செய்த போலீஸ்!

கோப்புப்படம்

தற்காப்புக்காகவே ரவுடி வல்லரசுவை சுட்டுக்கொன்றதாக தாக்குதலுக்குள்ளான காவல் ஆய்வாளர் பவுன்ராஜ் விளக்கமளித்தார். நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் கன்னியப்பனிடம் தொலைபேசியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை வியாசர்பாடியில், காவல் ஆய்வாளரை கொடூரமாகத் தாக்கிய பிரபல ரவுடி வல்லரசு, என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  சென்னை வியாசர்பாடி எம்.என்.கார்டன் பகுதியில், பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடிகள் வல்லரசு உள்ளிட்டோர் நின்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதனையடுத்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலரான பவுன்ராஜ், சக காவலர்களுடன் சென்று ரவுடிகளை கைது செய்ய முயற்சித்துள்ளார்.

  அப்போது கூட்டாளிகளுடன் இருந்த பிரபல ரவுடி வல்லரசு, காவலர் பவுன்ராஜை பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார்.

  இதில்  காவல் ஆய்வாளர் பவுன்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே சாய்ந்து விழுந்தார். இதனையடுத்து உடனடியாக காவலர்கள் எதிர்தாக்குதல் நடத்தியதில், ரவுடி வல்லரசுவை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

  காவல் ஆய்வாளர் பவுன்ராஜை மீட்ட காவலர்கள், அவரை ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அவருக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதால், 20 தையல்கள் வரை அவரது உடம்பில் போடப்பட்டுள்ளன.

  இதனிடையே, தற்காப்புக்காகவே ரவுடி வல்லரசுவை சுட்டுக்கொன்றதாக தாக்குதலுக்குள்ளான காவல் ஆய்வாளர் பவுன்ராஜ் விளக்கமளித்தார். நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் கன்னியப்பனிடம் தொலைபேசியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: