கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மின்கம்பியில் சிக்கி தாய் யானை கொல்லப்பட்டதால், அனாதையாக்கப்பட்ட 6 மாத ஆண் யானைக்குட்டியை நாய்கள் கடித்து காயமாக்கின. அந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், ரகு என பெயரிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் தங்கவைத்து சிகிச்சை அளித்தனர்.
இதே போல், ரயில் விபத்தில் தாயை பறிகொடுத்த பொம்மி என்ற பெண் யானைக்குட்டியும் முகாம் வந்து சேர்ந்தது. இவற்றை, காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெல்லி தம்பதி பராமரித்து வந்தனர். யானைகளுக்கும் அவர்களுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை படம் பிடித்து காட்டிய The Elephant Whisperer தற்போது ஆஸ்கர் வென்றது.
இதையும் படிங்க: யானையை குழந்தை போல வளர்த்தோம்; ஆஸ்கர் கிடைத்ததில் மகிழ்ச்சி" - பெள்ளி நெகிழ்ச்சி!
இதன் மூலம் ஆவணப் படத்தில் இடம்பெற்ற குட்டி யானைகளை பராமரித்து வந்த பாகன் தம்பதியான பொம்மன் மற்றும் பெள்ளி மிகவும் பிரபலமாகி உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரையும் நேரில் பாராட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதற்காக, பாகன் தம்பதி இருவரும் சென்னை வந்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பொம்மன்-பெள்ளி வாழ்த்து பெற்றனர். அவர்கள் இருவருக்கும் முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும், இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Oscar Awards