Election Results 2021: மே 2-ம் தேதி தேர்தல் வெற்றி கொண்ட்டாட்டங்களுக்கு தடை - தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை நாளாகிய மே 2 அன்று தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் தடை விதித்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்தது. ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, கேராளா, புதுச்சேரி, மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிரும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்குவங்கத்தில் 29ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், மே 2ஆம் தேதி ஞாயிற்று கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்கிடையில், கரூர் தொகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொரோனா 2 ஆவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே முக்கிய காரணம், என்றும் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளி இன்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே தொற்று பரவலுக்கான காரணம். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணைம் அதை காதில் வாங்கவில்லை. இதனால், தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று உயர் நீதிமன்றம் காட்டமாக கூறியது.

    தேர்தல் நாளான்று உரிய கொரோனா பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறிய பதிலுக்கு, தேர்தல் பிரச்சாரம் நடத்த போதேல்லாம்,வேறு கிரகத்தில் இருந்தீர்களா என தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அத்துடன், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று, உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    அத்துடன், வாக்கு எண்ணிக்கை நாளில், அனைத்து விதமான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் உரிய ஆலோசனைகளைப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    Must Read : ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை 2 வாரத்தில் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டம்?



    இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போதும், தேர்தல் முடிவுக்கு பின்னரும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
    Published by:Suresh V
    First published: