Home » News » Tamil-nadu » THE DRIVER WHO LOST HIS LIVELIHOOD DUE TO THE CURFEW HAS BEEN SELLING TEA AND BREAD ON HIS BICYCLE VIN

EMI கட்ட வழியில்லை... சைக்கிளில் டீ விற்கும் வாடகை கார் உரிமையாளர்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஓட்டுநர், காருக்கு மாத தவணையை கட்டமுடியாமல் சைக்கிளில் டீ, வடை விற்பனை செய்து வருகிறார்.

EMI கட்ட வழியில்லை... சைக்கிளில் டீ விற்கும் வாடகை கார் உரிமையாளர்
டீ விற்பனை செய்யும் கார் ஓட்டுநர்
  • News18
  • Last Updated: August 17, 2020, 11:33 AM IST
  • Share this:
நாகை அடுத்துள்ள நாகூர் புதுமனைத்தெருவை சேர்ந்தவர், முஹம்மது மைதீன். வாடகை வீட்டில் வசித்து வரும் முகமது மைதீன் 20 வருடங்களாக வாடகைக்கார் ஓட்டிவந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக சேர்த்து வைத்த தனது பணத்தில் வங்கி கடனில் மாத தவணைக்கு கார் வாங்கி சொந்தமாக சவாரி ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வாழ்வு நிலையை புரட்டி போட்டு இருக்கிறது இந்த ஊரடங்கு.

வாடகை வீட்டில் வசித்து வந்த முஹம்மது மைதீன், காரில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை ஓட்டி மாத கடனையும் அடைத்து வந்த நிலையில் ஊரடங்கு காரணத்தால், வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாத தவணை கட்டுவதற்கு வங்கிகளின் நெருக்கடி கொடுக்கவே, வேறு வழியின்றி தற்போது சைக்கிளில் தெரு தெருவாக சென்று டீ, வடை விற்று பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

சென்னைக்கு ஒருமுறை சவாரி சென்று வந்தால், செலவுகள் போக 1500 ரூபாய் லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ள முஹம்மது மைதீன், தற்போது டீ விற்று நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் கூட முழுதாய் கிடைப்பதில்லை என்றும் அன்றாடம் குடும்பத்தை ஓட்டுவதற்கு கடும் சிரமத்தை சந்திப்பதாக வேதனையோடு கூறியுள்ளார்.


மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு கடும் சிரமத்தை சந்தித்து வரும் முஹம்மது இப்ராஹிம் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

Also read... கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஓட்டுநர்.. ஆட்டோவையே வடை கடையாக மாற்றியவருக்கு குவியும் பாராட்டு..

கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் இன்னல்களை சந்தித்து வருவதற்கு அரசின் திட்டமிடல் இல்லாத நடவடிக்கைகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், இதுபோல தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து மாத தவணை கட்டமுடியாமல் திணறி வரும் லட்சம்கணக்கான வாகன உரிமையாளர்களை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.சொந்தமாக கார் வைத்து பிழைப்பு நடத்தி வந்த, முஹம்மது மைதீன் விற்பனை செய்யும் டீ மற்றும் வடைக்கு அவரது கஷ்ட நிலையை அறிந்த நாகூரை சேர்ந்த பலரும், ஆதரவு தெரிவித்து வியாபாரம் செய்து அவருக்கு கை கொடுத்து வருகின்றனர். ஊரடங்கால் கார் ஓட்டமுடியாத நிலை ஏற்பட்டாலும், தன்னம்பிக்கை தளராத முஹம்மது மைதீனின் டீ கேன் சைக்கிள் நாகூரின் பல தெருக்களில் பறந்துகொண்டு இருக்கிறது.
First published: August 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading