தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுக்கிறது பள்ளிக்கல்வித்துறை..

அரசு உதவிபெறும் பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற விவரங்களை இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுக்கிறது பள்ளிக்கல்வித்துறை..
பள்ளி கல்வித்துறை
  • News18
  • Last Updated: September 23, 2020, 11:43 AM IST
  • Share this:
தனியார் பள்ளிகளிலிருந்து 2020-2021-ஆம் கல்வியாண்டில்  அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர் விவரங்களை கணக்கெடுக்கிறது பள்ளிக்கல்வித்துறை.

தனியார் பள்ளிகளிலிருந்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர் என்கிற விவரங்களை சமர்ப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் கூடுதலாக சேர்ந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Also read... புதிய கல்விக்கொள்கை: பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துக்களை ஆன்லைனில் பெற உயர்கல்வித்துறை உத்தரவு..

தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். அதில் CBSE பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற விவரங்களை இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் உயர்நிலை மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள்  சேர்ந்த விவரங்கள் தெரிய வரும்.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading