அபராதம்.. தகுந்த நடவடிக்கை.. உரியமுறையில் செயல்படாத அதிகாரிகள் மீதான பள்ளிக்கல்வித்துறை உத்தரவு என்ன?

பள்ளிக் கல்வித்துறை

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில்  பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது  உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பள்ளிக்கல்வித் துறை மீது  தொடரப்பட்ட வழக்குகளில் உரிய முறையில் செயல்படாத  அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு புதிய வழக்குகளும் கொடுக்கப்படுகின்றன அந்த வழக்குகளில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோர் இணைக்கப்படுகின்றனர். இதுபோன்ற வழக்குகள் தமிழகம் முழுவதும் நிலுவையில் இருக்கும் நிலையில் அந்த வழக்குகளில் உரிய முறையில் மேல்முறையீட்டு மனு சீராய்வு மனு ஆகியவற்றை தாக்கல் செய்யும் பொறுப்பு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு உள்ளது.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை மீதான வழக்குகளில் துறைசார்ந்த அலுவலர்கள் உரிய கவனம் செலுத்தாததன்  காரணமாக வழக்குகளில் காலதாமதம் ஏற்படுவதோடு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Also read... பாஸ் போடுவாங்களா.. இல்லையா.. விசாரணையை பார்க்க நீதிமன்ற வீடியோ கான்பரன்சிங்கில் இணைந்த அரியர் மாணவர்கள்... ஸ்தம்பித்தது வழக்குகள்!இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில்  பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது  உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மேலும் துறைசார்ந்த வழக்குகளை விரைந்து முடித்திடும் வகையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் எனவும் தனது உத்தரவில் அனுமதி அளித்து பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: