உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கான கலந்தாய்வு நவம்பர் 3, 4 தேதிகளில் நடைபெறும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

பள்ளி கல்வித்துறை

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்க கூடிய உயர் கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான 551 நபர்களின் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உடற்கல்வி ஆசிரியர் பணியிட கலந்தாய்வு அடுத்த மாதம் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில் நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்க கூடிய உயர் கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான 551 நபர்களின் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Also read... 'கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை.. பொறியியல் பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன' - நீதிமன்றம்இதனை தொடர்ந்து கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தின் வாயிலாக உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பணி நியமன ஆணையை பெரும் உடற்கல்வி ஆசிரியர்கள் உரிய காலத்திற்குள் பணியில் சேரவில்லை என்றால் அவர்களின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: