ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆசிரியர்கள் EL விடுப்பை இனி பணமாக்க முடியாது... பள்ளிக்கல்வி துறை உத்தரவு

ஆசிரியர்கள் EL விடுப்பை இனி பணமாக்க முடியாது... பள்ளிக்கல்வி துறை உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

Earned Leave | தமிழ்நாடு அரசில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களாக பணியாற்றும் அனைவரும் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை எடுக்காமல், அந்நாட்களில் பணிக்கு வந்திருப்பின் அதற்கான ஊதியத் தொகையை பணமாக பெறும் நடைமுறையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 11-ம் தேதி முதல் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

Also read... மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்..

இதைத்தொடர்ந்து தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ள பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், கல்வித்துறை ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, தனியே ஓர் உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: DPI, Govt teachers