கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் என்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாது...!

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் என்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாது...!

கோப்புப் படம்

தடுப்பூசி போடுவதால் ஏற்படும் வலிக்கு சாதாரண பாராசிடமால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் உட்கொள்ளக்கூடிய, கூடாத உணவு மற்றும் மருந்து எவை என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து பல வாட்ஸ் ஆப் பேஸ்புக தகவல்கள் உதவுகின்றன. அவற்றில் பல வதந்திகளாகவே உள்ளன. தடுப்பூசி எடுத்துக் கொண்ட நபர்கள் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று எந்த அறிவுறுத்தல்களும் கிடையாது. எப்போதும் போல் எல்லா உணவும் சாப்பிடலாம்.

அதே போல் 28 நாட்கள் மது அருந்த கூடாது என்ற செய்தி பாதி மட்டுமே உண்மையாகும். அதாவது கொரோனா தடுப்பூசி அல்ல எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் 72 மணி நேரத்துக்கு மது அருந்தாமல் இருக்க வேண்டும். மது தடுப்பூசியின் வீரியத்தை குறைத்து விடும். உடலை வருத்தம் கடுமையான பணிகளை 24 மணி நேரத்துக்கு செய்யக் கூடாது என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகிறார்.

Also read... காலரா முதல் கொரோனா வைரஸ் வரை - தொற்றுநோய்களின் வரலாறு பற்றி இந்தியர்கள் மறந்தது ஏன்?

சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அரசு அனுமதிக்கிறது. கூட்டு நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் தொடர்ந்து எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் மருந்துகளை தடுப்பூசி போடும் முன்னும் பின்னும் எடுத்துக் கொள்ளலாம் என மூத்த பொது மருத்துவர் ராஜேந்திரன் தெரிவிக்கிறார்.

சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் அசாதாரணமாக இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்கிறார். இருதய கோளாறுகளுக்கு மருந்து உட்கொள்பவர்கள், ஆஸ்பிரின் போன்ற ரத்தத்தை மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் மூன்று நாட்கள் முன் மருந்தை நிறுத்தி விட்டு, தடுப்பூசி போட்டு ஒரு நாள் மருந்து உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிறார்.

தடுப்பூசி போடுவதால் ஏற்படும் வலிக்கு சாதாரண பாராசிடமால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். சக்திவாய்ந்த வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கிறார் மருத்துவர் ராஜேந்திரன்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

சிறந்த கதைகள்