• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிறந்த குழந்தைக்கு தொப்புள் வழியே வெளியேறும் மலம்...! அறுவை சிகிச்சைக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்!

பிறந்த குழந்தைக்கு தொப்புள் வழியே வெளியேறும் மலம்...! அறுவை சிகிச்சைக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்!

குழந்தையில் குடும்பத்திற்கு உதவும் அதிமுகவினர்

குழந்தையில் குடும்பத்திற்கு உதவும் அதிமுகவினர்

மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பலரும் உதவியதன் பேரில் குழந்தைக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

  • Share this:
மானாமதுரையில் பிறந்த குழந்தைக்கு தொப்புள் வழியே மலம் வெளியேறுவதால் மருத்துவம் செய்ய பணம் இல்லாமல் தவித்த பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் உதவி செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் மாரி (28). கூலி வேலை செய்து வரும் இவருக்கு திவ்யா (22) என்ற பெண்ணுடன் திருமணமாகி கடந்த டிசம்பரில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தையுடன் வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் பயனில்லாத நிலையில் மேலும் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்ததால், கூலி வேலை செய்யும் மாரி வேறு வழியின்றி குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

இந்தத் தகவல் சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கவனத்திற்குக் கொண்டு சென்ற நிலையில், குழந்தையை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன், சமூக ஆர்வலர்கள் பாலசுப்ரமணியன், சங்கரசுப்ரமணியன் உள்ளிட்டோர் உதவியதன் பேரில் இன்று மதுரை தனியார் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அந்தக் குழந்தையும் பெற்றோரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினசரி கூலிவேலை செய்து வரும் மாரி, கடந்த நான்கு மாத காலமாக குழந்தையின் நிலை குறித்து பெரும் கவலையில் இருந்துள்ளார். வேலையும் இன்றி தவித்தவருக்கு குழந்தையின் மருத்துவ சிகிச்சை பெரும் சுமையாக இருந்தள்ளது. மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பலரும் உதவியதன் பேரில் குழந்தைக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

சில நாட்கள் முன் மானாமதுரை அழகர்கோயில் தெருவைச் சேர்ந்த பிறந்த 10 நாள் ஆன குழந்தைக்கு முதுகில் கட்டியை அகற்ற முடியாமல் தவித்த பெற்றோர்க்கு மதுரை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தற்போது இந்தக் குழந்தைக்கும் உதவி உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: