ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றத்தில் டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம்

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றத்தில் டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம்

முன்னாள் நீதிபதி கர்ணன்

காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், கர்ணன் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்கபட்டு கர்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு விடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது வீடியோக்களை முடக்க யூ டியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நீதித்துறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின், முக்கியமான அரசியல் சாசன பதவி வகித்த முன்னாள் நீதிபதி கர்ணன், இதுபோல் தொடர்ந்து பேசி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

Also read... வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடு: செந்தில் பாலாஜி மனுவுக்கு பதில் சொல்ல தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், கர்ணன் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்கபட்டு கர்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கு விசாரணை ஜனவரி 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் அடுத்த விசாரணை போது நேரில் அஜராக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: