முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புயலாக மாறும் தாழ்வுமண்டலம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை

புயலாக மாறும் தாழ்வுமண்டலம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை

புயல்

புயல்

  • Last Updated :

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக தெரிவித்தார். லூபன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மேலும் வலுப்பெற்று தெற்கு ஓமன் கரையை நோக்கி நகரும் எனக் கூறிய அவர், புதிதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி மத்திய வங்கக்கடலில் நிலவுவதாக குறிப்பிட்டார்.

இந்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெற்று ஒடிசா கரையை நோக்கி நகரும் என்றும் இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் மாறியுள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார். அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் கூடுதல் மழை பெய்துள்ளதாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தினார்.

First published:

Tags: Bay of Bengal, Meteorological Center, Pressure formed