முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த மாதம் முதலாம், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு - உயர் கல்வித்துறை திட்டம்!

அடுத்த மாதம் முதலாம், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு - உயர் கல்வித்துறை திட்டம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் ஒரு வகுப்பிற்கு 25 முதல் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அடுத்த மாதம் முதல் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் துவக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் இளங்கலை இறுதி ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர் களுக்கு நேரடியாக வகுப்புகள் துவக்கப்பட்டது மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தற்போது அடுத்த மாதம் முதல், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகளை துவக்க உயர் கல்வித்துறை ஆலோசித்து வருகின்றது. அதனடிப்படையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் ஒரு வகுப்பிற்கு 25 முதல் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Also read... Gold Rate | ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ. 320 உயர்வு!

அதேபோல கல்லூரி வளாகங்களை தினசரி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திடவும், வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு தினசரி வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று விடுதிகளில் திறக்கவும் விடுதி அறைகளில் தங்க உள்ள மாணவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்து அதன் பிறகு விடுதிகளில் மாணவர்களை அனுமதிக்கலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: College student, Higher education