• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுசூதனன் மறைவு: அடுத்த அதிமுக அவைத்தலைவர் யார்? வரிசையில் முக்கிய தலைவர்களின் பெயர்கள்..

மதுசூதனன் மறைவு: அடுத்த அதிமுக அவைத்தலைவர் யார்? வரிசையில் முக்கிய தலைவர்களின் பெயர்கள்..

அஇஅதிமுக அலுவலகம்

அஇஅதிமுக அலுவலகம்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவில் அடுத்த அவைத்தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்து வந்த மதுசூதனன் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று காலமானார், அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெற்று அப்படியே உடல் தகனம் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்துள்ளது.

1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அதிமுக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது, கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் தலைவர் என்கிற பதவி இல்லாமல் பொதுச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு கட்சியின் விதிகள் உருவாக்கப்பட்டது. எம்ஜிஆருக்கு அண்ணாவின் மீது அளவுகடந்த பற்றின் காரணமாக தலைவர் பதவி என்பது அண்ணாவிற்கு மட்டும் என்று சொல்லி அதிமுகவின் பொதுச் செயலாளருக்கு அதிக அதிகாரம் வழிவகுத்து தலைவர் என்ற பதவி இல்லாமல் அதிமுக உருவாக்கப்பட்டது.

Also read: lockdown | வெள்ளி, சனி, ஞாயிறு அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை!

இந்நிலையில் அதிமுகவில் அவைத்தலைவர் என்கிற பதவி உருவாக்கப்பட்டு 1972ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆறு பேர் அந்த பொறுப்பில் இருந்துள்ளனர். பாவலர் மா.முத்துசாமி, கோவில்பட்டி வள்ளிமுத்து, நாவலர் நெடுஞ்செழியன், சி.பொன்னையன், புலவர் புலமைப்பித்தன் அதன்பிறகு 2007ஆம் ஆண்டு முதல் மதுசூதனன் ஆகியோர் இந்த பொறுப்பில் இருந்துள்ளனர்.

அதிமுகவில் அவைத் தலைவர் என்கிற பொறுப்புக்கு பெரிய அளவில் தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை என்றாலும்,  அந்தப் பதவி கௌரவமான பதவியாக பார்க்கப்படுகிறது.

இதுவரை 1972 ஆம் ஆண்டு முதல் எம்ஜிஆர் இறந்த நேரத்திலிருந்து அதிமுகவில் இருந்தவர்கள் அவைத்தலைவராக  இருந்துள்ளனர். எனவே அதிமுகவில் அடுத்த அவைத்தலைவர் கட்சியின் மூத்த நிர்வாகியாகவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் பயணித்தவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தமிழ்மகன் உசேன், பா.மோகன் ஆகியோர் தற்போது கட்சியின் நிர்வாக ரீதியில் மூத்த உறுப்பினர்களாக உள்ளனர்,

அதேவேளையில் மூத்த உறுப்பினராக உள்ள வரகூர் அருணாச்சலம், திருச்சி நல்லுசாமி ஆகியோரும் அதிமுகவின் மூத்த முன்னோடிகளாக உள்ளனர். அவர்களில் ஒருவர் அதிமுகவின் அடுத்த அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுகவை பொறுத்தவரை கட்சியில் பொதுச் செயலாளருக்கு தான் அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாக உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர் மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைய ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு பொதுச் செயலாளரான அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு இந்த இரண்டு பதிவுகளுக்கும் வழங்கி பொதுக் குழு தீர்மானித்தது.

அவைத் தலைவருக்கு என தனித்த அதிகாரம் இல்லை அதிமுகவில் மாவட்ட அளவிலும் மாவட்ட அவைத்தலைவர் என்கிற பொறுப்பு உள்ளது. அவைத்தலைவர் கடந்த காலங்களில் பொதுச் செயலாளர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் அனுமதியோடு கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் உள்ளது. எனவே அதிமுகவில் அடுத்த அவைத்தலைவர் யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: