Home /News /tamil-nadu /

வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் - வானிலை மையம் கணிப்பு...!

வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் - வானிலை மையம் கணிப்பு...!

மாதிரிபப்டம்

மாதிரிபப்டம்

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 390 கி.மீ. தூரத்தில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது திரிகோண மலையில் இருந்து 310 கிலோமீட்டரும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு - வடகிழக்கு திசையில் 300 கிலோமீட்டரும்,

    புதுச்சேரியில் இருந்து 320 கிலோமீட்டரும், சென்னைக்கு தென்கிழக்கே 390கிலோ மீட்டரிலும் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

    Also read... மீ டு புகார்: இயக்குநர் சுசிகணேசன் அவதூறு வழக்கு.. லீனா மணிமேகலை மனு தள்ளுபடி

    இதனால் வட கடலோர தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் சில நேரங்களில் 75 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு 7-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Weather News in Tamil

    அடுத்த செய்தி