ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு குறைய வாய்ப்பு?

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு குறைய வாய்ப்பு?

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு பகுதியில் நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  வடகிழக்கு பருவமழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து , தமிழகத்தில் 6 இடங்களில் அதிகனமழையும், 16 இடங்களில் மிக கனமழை, 108 இடங்களில் கனமழை பெய்துள்ளது.

  வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு பகுதியில் நிலவுக்கிறது. இதன்காரணமாக டெல்டா  மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு மேக வெடிப்பு ( Cloud Burst ) காரணம் அல்ல என்றார்.

  மேலும் வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு பகுதியில் நிலவுகிறது என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் கேரள் பகுதியை அடையும் என்றும் தெரிவித்தார்.

  இதையும் படிங்க: சீர்காழி பேய் மழைக்கு மேகவெடிப்பு காரணமா..? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

  தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை பருவமழை வழக்கத்தை விட 27% அதிகமாகவுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மேலும் வட தமிழக கடற்கரையோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

  Published by:Arunkumar A
  First published: