• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்லும் முடிவை கைவிட வேண்டும் - வானதி சீனிவாசன்

ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்லும் முடிவை கைவிட வேண்டும் - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

புலியை சுட்டுக் கொல்லும் விஷயத்தில்,புலிகளுடைய எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது,

  • Share this:
நீலகிரி மாவட்டத்தில் ஆட்கொள்ளி புலியை சுட்டுக் கொல்வதை விட்டு விட்டு, தமிழக வனத்துறை  மிக கவனமாக செயல்பட்டு புலியை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்காக உள்ளூர் மக்கள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேட்டு கொண்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் காஞ்சிபுரம் வருகை தந்தார். அக்டோபர் -2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தேசப்பிதா காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டுஉள்ளூர் பொருட்களை வாங்கி பயன்படுத்த ஊக்கப்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் தேரடி  பகுதியில் உள்ள காதி அங்காடியில்  கட்சி நிர்வாகிகளுடன் சென்று விற்பனை செய்யும் பொருட்களை பார்வையிட்டு பொதுமக்களை வாங்கிட ஊக்கப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் காந்திஜியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும்தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென தெரிவித்து வந்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்தபின்பு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனால் இரட்டை நிலைப்பாட்டை திமுக விட்டுவிட்டு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் .

நீலகிரி மாவட்டத்தில் புலியை சுட்டுக் கொல்லும் விஷயத்தில்,புலிகளுடைய எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது.அதை  ஒற்றை புலி என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த விஷயமாக கருதவேண்டும்,  தமிழக வனத்துறை மிக கவனமாக செயல்பட்டு புலியை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்காக உள்ளூர் மக்கள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வானதி சீனிவாசன் கேட்டு கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: