• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - அரசு அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - அரசு அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (நவ.5) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளளூர் விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    வருகின்ற நவம்பர் 4ம் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தீபாவளிக்கு வேண்டிய துணிமணிகளை வாங்கி வருகின்றனர்.

    இதனிடையே, தீபாவளிக்கு ஒருநாள் தான் விடுமுறை என்பதால், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர் சென்று வருவது சிரமமாக இருக்கும் என்றும், பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தினருடன் இருக்க முடியாத சூழல் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விழாவினை மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக 05.11.2021 வெள்ளிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பலதரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.

    எனவே தீபாவளிக்கு அடுத்த நாளான 05.11.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 20.11.2021 (மூன்றாம் சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: